Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது! அசத்தலான அம்சங்கள்…!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை செல்போன்களான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 சீரியஸ்  ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள Galaxy Unpacked 2024 இல் அறிமுகப்படுத்த உள்ளது. அதனுடன் புதிய சாம்சங் வயர்லெஸ் இயர்பட்கள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகப்படுத்தபட உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, ஈவன் ப்ளாஸ் (Evan Blass) என்ற நபர் தனது எக்ஸ் (@evleaks on X) தளத்தில் முழு விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி, இரண்டு சாதனங்களும் (Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 ) கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட மேம்படுத்தப்பட்ட அம்சத்துடன் வரும். முதல் முறையாக ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் தூசி எதிர்ப்பு அம்சம் உள்ளது. இதன் காரணமாக இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஆயுள் அதிகரிக்கும். 

ரெக்கார்டிங்குகளை டிரான்ஸ்கிரிப்ட் செய்யவும் மற்றும் குறிப்புகளை சுருக்கவும் பயனர்களுக்கு உதவும் வகையில், நோட் அசிஸ்ட் போன்ற AI அம்சங்களுடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் என்று கூறப்படுகிறது. கூகிளின் சர்க்கிள் டு சர்ச் அம்சமும் இந்த மடிக்கக்கூடிய எஸ்-பென் அம்சத்துடன் வருகிறது எனக் கூறியுள்ளார்.

சாம்சங் Galaxy Z Fold 6 அம்சங்கள்

லீக்கான தகவலின்படி, சாம்சங் Galaxy Z Fold 6 ஆனது Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். 7.6-இன்ச் இன்னர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருப்பதால், ​​தற்போதைய Galaxy Z Fold 5ஐ விட சற்று மெல்லியதாகவும் மற்றும் 14 கிராம் எடை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

more via Leakmail: https://t.co/VkdtXzIEGM pic.twitter.com/7vWBvHemdM

— Evan Blass (@evleaks) June 29, 2024

 

இந்த போனின் வெளிப்புற டிஸ்ப்ளே 6.2 இன்ச் முதல் 6.3 இன்ச் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மேம்படுத்தப்பட்ட ஆர்மர் அலுமினியம் அம்சத்துடன் வரும். கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் தற்போதைய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் Galaxy Z Flip 6 அம்சங்கள்

சாம்சங் Galaxy Z Flip 6 ஆனது Snapdragon 8 Gen 3 பிராசஸர் இருப்பதால் மிக வேகமாக இயங்க கூடியதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பும் இதில் இடம்பெறும். அதாவது 50 MP வைட்-ஆங்கிள் கேமரா, 12 MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10 MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கலாம். 120Hz புதுப்பிப்பு வேகம் இருக்கும். 7.6 இன்ச் FHD+ தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளே இருக்கும். 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்கலாம். 4,400 mAh பேட்டரி பவர் இருக்கும். OLEDக்கு பதிலாக IPS பேனலைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது IPX8 தர மதிப்பை பெற்று இருப்பதால் தண்ணீரில் பட்டால் எதுவும் ஆகாது எனக் கூறப்படுகிறது. இயங்குதளத்தை பொருத்தவரையில் Galaxy AI அம்சங்களுடன் Android 14 அடிப்படையிலான OneUI 6.1 இருக்கும்.

முன்பதிவு எப்படி செய்வது?

வரவிருக்கும் Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy Buds 3 மற்றும் Galaxy Watch 7-ஐ சாம்சங் வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யலாம் மற்றும் சாம்சங் இந்தியா இணையதளம் வழியாக ரூ.1,999க்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.