திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 15-ந் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் மாதப்பிறப்பை ஒட்டி, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள […]