IND vs ZIM Match Updates: கடந்த வாரம் சனிக்கிழமை இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது. தொடர்ந்து நாடு இந்திய அணியை கொண்டாடி வரும் இந்த சூழலில், இந்திய இளம் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். சீனியர்களுக்கும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் சுப்மான் கில் இந்த இளம் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் விளையாட உள்ளன. இன்று தொடங்கும் இந்த தொடர் வரும் ஜூல 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றும், நாளையும் முதலிரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூலை 10, 12, 14 ஆகிய தேதிகளில் கடைசி மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
IND vs ZIM: இன்று முதல் டி20 போட்டி
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹாராரே நகரில் உள்ள ஹாராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்த 5 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டிகள் நடைபெறும். இந்த தொடரை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலிலும், சோனிலிவ் ஓடிடி தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம். சிக்கந்தர் ராஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காத நிலையில், இந்திய இளம் அணியுடன் மோத தற்போது காத்திருக்கிறது.