கூகுள் மேப்பிற்கு நோ…. இனி ஓலா மேப் தான்… ரூ.100 கோடியை சேமிக்கும் ஓலா…!!

இன்றைய காலகட்டத்தில், பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களில் கூட ஓலா, உபர் போன்ற ஆப் மூலம் வாகனங்களை புக் செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓலா நிறுவனம் பயணங்களில் வழிகாட்டியாக கூகுள் மேம்ப்பை பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அதிலிருந்து ஓலா மேம்ப் முறைக்கு மாறுவதாக அறிவித்துள்ளது. 

ஓலா நிறுவனம் பாதைகளை வழிகாட்டும் கூகுள் மேப்பிற்கு பதிலாக, தனது சொந்த தொழில் நுட்பமான ஓலா மேப் முறையை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த முடிவினை அறிவித்த ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், இதன் மூலம் நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாயை சேமிக்கும் எனவும் கூறினார். 

ஓலா மேம்பில் தொழில்நுட்ப விபரம் குறித்து தெரிவித்த ஓலா CEO, இதில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஸ்ட்ரீட் வ்யூ, இண்டோர் இமேஜ், NERF அம்சங்கள், ட்ரோன் மேம்ப்கள், 3டி இமேஜ்கள் ஆகியவை சேர்க்கப்படும் என அவர் கூறினார். 

சுமார் 3 மாதங்கள் முன்னதாக, மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) என்னும் கிளவுட் கம்யூட்டிங் சேவைக்கு பதிலாக ஓலா தனது சொந்த AI நிறுவனமான க்ரூடிம் (Krutim) நடைமுறைக்கு மாறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ஓலா நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கை குறித்து அறித்த ஓலா நிறுவனத்தின் பாவிஷ் அகர்வால், “கடந்த மாதம் Azure-லிருந்து வெளியேறிய பிறகு, நாங்கள் இப்போது Google மேப்பிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம். இதற்காக நாங்கள் ஒரு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து வந்த நிலையில், நாங்கள் எங்கள் Ola மேப் முறைக்கு முழுமையாக மாறியதன் மூலம் இதற்கான செலவு, இந்த மாதம் 0 என்ற அளவில் உள்ளது” என தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். 

After Azure exit last month, we’ve now fully exited google maps. We used to spend ₹100 cr a year but we’ve made that 0 this month by moving completely to our in house Ola maps! Check your Ola app and update if needed 

Also, Ola maps API available on @Krutrim cloud! Many more… pic.twitter.com/wYj1Q1YohO

— Bhavish Aggarwal (@bhash) July 5, 2024

தொழில்நுபங்கள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில், வழி தெரியாத புதிய இடங்களுக்கு செல்வது என்பது இப்போது எளிதாகி விட்டது. கூகுள் மேப்ஸ் உதவியால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வழி தெரியாமல் தவிக்க வேண்டியதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி நினைத்த இடங்களுக்கு செல்கிறார்கள். ஆனாலும் கூட கூகுள் மேப்ஸ் சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை சரியாக பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று இருக்கின்றன. சமீபத்தில் கேரளாவில் கார் ஒன்று ஆற்றில் சிக்கிக் கொண்டது நினைவில் இருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.