சமூக அபிவிருத்தி நிறுவனம் முன்னெடுக்கும் ஆங்கில Diploma பாடநெறி ஆரம்பநிகழ்வு

  • இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற தேசிய அபிவிருத்தி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பாடநெறிகளோடு புதிதாக ஆங்கில பாடநெறியும் உள்வாங்கப்பட்டு நடாத்தப்படவுள்ளது. இவ் ஆங்கில பாடநெறியினை ஆரம்பிக்கும் ஆரம்பநிகழ்வு நேற்று (05) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

 

ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் Hon .Anupa pasqual (State Minister Of social empowerment,தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Dr.ரவீந்திரநாத்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நளாஜினி இன்பராஜ்,சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் அ.கேதீஸ்வரன்,மற்றும் தேசிய அபிவிருத்தி நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்சி நெறியினை தொடரவுள்ள மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்

 

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் உள சமூக பாடநெறிகள் மற்றும் சமூக பணி பாடநெறிகளை வழங்குகின்ற நிறுவனமாகும்.

 

வடமாகாணத்தில் Diploma பாடநெறிகள், சான்றிதழ் பாடநெறிகள், முதுமானி பாடநெறிகளையும் வழங்கிவருகின்றது.

 

இதனோடு ஒர் அங்கமாக ஆங்கில Diploma பாடநெறியினை கிளிநொச்சி நிலையத்தில் ஆரம்பித்துள்ளது.

 

நான்கு மாதங்களை கொண்டதான இப்பாடநெறியானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் இணையவழிமூலமாகவும், சனிக்கிழமைகளில் 2 மணியிலிருந்து 5 மணிவரை தேசிய சமூக அபிவிருத்தி நிலையத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதுவரையில் இப்பாடநெறியினை தொடர்வதற்கு உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பை தொடருகின்ற மாணவர்கள், அரச பணியினை தொடருகின்ற உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

 

பதிவுகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் இந்த மாதம் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னராக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

 

இப்பயிற்சி நெறிக்கான கட்டணமானது ரூபா 30000 ஆகும். பதிவுக்கட்டணம் 2000 ரூபாவாகும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.