மும்பையில் நீட்டா அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் இந்தியா முழுவதும் இருக்கும் ஏ பிளஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, எம்எஸ் தோனி, இஷான் கிஷன் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், சல்மான் கான், அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். சுருக்கமாக சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதனால் நீட்டா அம்பானி கலாச்சார மையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திடீரென நீடா அம்பானி மேடையேறி இந்தியாவுக்கு டி20 உலககோப்பை வென்று கொடுத்த மும்பை இந்தியன்ஸ் பிளேயர்களை இப்போது கவுரவிக்க இருப்பதாக தெரிவித்து ரோகித் சர்மாவுக்கு சர்பிரைஸ் கொடுத்தார்.
நீட்டா அம்பானி பேசும்போது, ” இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கிடைத்த பெருமை, அந்த பெருமையை இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை வென்று கொண்டு வந்த கேப்டன் ரோகித் சர்மாவை வரவேற்கிறேன். அவர் இந்தியாவை பெருமைபடுத்தி இருக்கிறார். அதேபோல், கடைசி ஓவரில் திரில்லாக கேட்ச் பிடித்து இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவை உறுதி செய்த சூர்யகுமார், அந்த ஓவரை சிறப்பாக வீசிய ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று பேரையும் மேடைக்கு அழைக்கிறேன். இவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளும், ஆதரவும். உங்களால் நாடே பெருமை கொண்டிருக்கிறது” என ஒவ்வொரு பிளேயரையும் கட்டித் தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
July 6, 2024
மேலும், ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண விழா கொண்டாட்டமாக இருந்தாலும், உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பெருமைப்படுத்த இந்த அருமையான தருணத்தை தவிர இன்னொரு தருணம் கிடைக்காது என நினைக்கிறேன் என்றும் நீட்டா அம்பானி கூறினார். இது டபுள் கொண்டாட்டமாக மாறிவிட்டது என்றும் மகிழ்ச்சியுடன் பேசினார். இதன்பிறகு பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை கொண்டு வந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள், 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி அந்த பெருமையை இந்தியாவுக்கு கொடுத்தது. இப்போது ரோகித் அணி கொடுத்திருக்கிறது. உங்களை பார்த்து நானும் நாடும் பெருமை கொள்கிறோம் என உணர்ச்சிப்பூர்வமாக் கூறினார்.
அம்பானி குடும்பம் கொடுத்த இந்த திடீர் கவுரத்தை ரோகித், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் மூவரும் மேடையேறியதும், அங்கு குழுமியிருந்த அத்தனை பிரபலங்களும் அவர்களை வாழ்த்தி, தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.