இந்த பிரபல பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய இருக்கும் குல்தீப் யாதவ்?

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இந்திய வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. பிறகு கோப்பையுடன் தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், மும்பை மரைன் டிரைவில் பிசிசிஐயால் ஏற்பாடு செய்யப்பட்ட ரோட் ஷோவிலும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதன் பிறகு ஒவ்வொரு வீரர்களும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

குல்தீப் யாதவ்

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது திருமண வாழ்க்கை குறித்து முதல் முறையாக பேசி உலர். டி20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டங்கள் முடிவடைந்து அவரது சொந்த ஊரான கான்பூருக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் குல்தீப் யாதவை வரவேற்க அவரது ஊரில் காத்து கொண்டிருந்தனர். வாணவேடிக்கை, மேளம் மற்றும் இசை நிகழ்ச்சி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பின்பு, தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் குல்தீப் யாதவ் பேசி இருந்தார். எந்த மாதிரியான பெண்ணை எதிர் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நிச்சயமாக எந்த பாலிவுட் நடிகையையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும், ஆனால் என் மனைவியாக எந்த பாலிவுட் நடிகையும் இருக்க மாட்டார். என்னையும் என் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். டி20 உலக கோப்பையை வென்றது குறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், “நாங்கள் ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தோம். இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவிற்கு இந்த உலகக் கோப்பையை கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை விட கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகள்

2024 டி20 உலக கோப்பையில் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் குல்தீப் யாதவ் விளையாடவில்லை. அங்குள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சிற்கு உதவியதால் சிராஜ் அணியில் இடம் பெற்று இருந்தார். பிறகு சூப்பர் 8 போட்டிகளுக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற போது குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றார். டி20 உலக கோப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்திய அணியில் ஒரு துருப்புசீட்டாக இருந்தார் குல்தீப். கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி இருந்தார். உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி பரிசு தொகையை வழங்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.