சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை… அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்..!!

இந்தியாவில் அமேசான் பிரைம் டே 2024 சலுகை விற்பனை ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அமேசான் அறிவித்துள்ளது. தனிப்பட்ட உபயோகங்களுக்கான எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் என வழக்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கும். அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும். சலுகை விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை பெறலாம். 

சலுகை விற்பனையின் போது அறிமுகப்படுத்தப்படும் பல புதிய ஸ்மார்ட்போன்கள்

சலுகை விற்பனை நடக்கும் இந்த இரு நாட்களில், Samsung, Honor, iQoo, Motorola மற்றும் பல பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் பிரைம் டே விற்பனையில் 450 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் புத்தம் புது தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று இ-காமர்ஸ் தளம் முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளது. விற்பனையின் போது அறிமுகப்படுத்தப்படும் பல புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் டே 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் விபரம்

சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங் போன்கள்

Samsung Galaxy M35 மற்றும் iQoo Z9 Lite 5G ஆகிய ஸ்மார்போன்கள் இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் டே சேல் என்னும் சலுகை விற்பனை தினத்தில் விற்பனைக்கு வரும்.

சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ், ரெட்மீ போன்கள்

அமேசான் சலுகை விற்பனையின் போது, ​​OnePlus Nord CE 4 Lite 5G அல்ட்ரா மாடல் ஆரஞ்சு வண்ணத்தில் கிடைக்கும். அமேசான் பிரைம் டே 2024 சலுகை விற்பனையின் போது புதிய OnePlus 12R 5G வேரியண்டும் அறிமுகப்படுத்தப்படும். Redmi 13 5G மற்றும் Realme GT 6T ஆகியவை முறையே ஆர்க்கிட் பிங்க் மற்றும் மிராக்கிள் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும். 

சலுகை விலையில் கிடைக்கும் ஹானர் 200 சீரிஸ் போன்கள்

ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்போன்களான Honor 200 5G மற்றும் Honor 200 Pro 5G ஆகியவை இந்தியாவில் ஜூலை 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றையும் வரவிருக்கும் பிரைம் டே விற்பனையின் போது வாங்கலாம். 

சலுகை விலையில் கிடைக்கும் மோடரோலா போன்கள்

இந்தியாவில் இந்த மாத தொடக்கத்தில், Motorola Razr 50 Ultra, அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன்களையும் அமேசான் பிரைம் டே 2024 சலுகை விற்பனையில் கிடைக்கும். 12ஜிபி + 512ஜிபி சேமிப்பகம் கொண்ட இந்த ஸ்ஆர் போன் விலை ரூ.99,999 என்ற அளவில் உள்ளது. சலுகை விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்போனை வாங்க வாடிக்கையாளர்கள், ஜூலை 10 முதல் அமேசானில் முன்பதிவு செய்யலாம். இது தவிர Lava Blaze X ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போனும் விற்பனைக்கு கிடைக்கும்.

அமேசான் பிரைம் டே 2024 சேல் விபரம் (Amazon Prime Day 2024 Sale) 

சலுகை விற்பனையின் போது அனைத்து வாடிக்கையாளர்களும் மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவார்கள் என்று இ-காமர்ஸ் தளம் உறுதி செய்துள்ளது. பரிவர்த்தனையின் போது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது இஎம்ஐ ஆப்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.