தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், அருள்மிகு ராமலிங்க சுவாமி ஆலயம் ராமபிரான் பாவம் நீங்கப்பெற்றதால் தலத்திற்கு “பாபநாசம்’ என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. ராமாயணத்தோடு […]