கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வம்.இவி (Curvv.ev) நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதால் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலுக்கு நேரடியான கூபே போட்டியாளர்கள் இல்லை என்றாலும் இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவுள்ள சிட்ரோன் பசால்ட், ஹூண்டாய் கிரெட்டா.இவி, மாருதி eVX மற்றும் மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
டாடாவின் பிரத்தியேக Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின் தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Level 2 ADAS, பனேரோமிக் சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை சிஸ்டம் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட் நிலை மாடல் முதன்முறையாக காட்சிக்கு வந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு தடவை சோதனை ஓட்ட பங்கள் வெளியான நிலையில் அறிமுகத்தை டாடா உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக எலக்ட்ரிக் மாடலும் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ICE கர்வ் மாடலும் சந்தைக்கு வரவுள்ளது.