இந்தியாவில் ரூபாய் 66 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+ எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.Manfaktur Mountain கிரே மேக்னோ நிறத்துடன் ஏழு விதமான நிறங்கள் ஆனது இந்த காரில் கிடைக்கின்றது.
விற்பனையில் உள்ள ICE ரக GLA எஸ்யூவி மாடலைப் போலவே அமைந்திருக்கின்றது முன்புறத்தில் மிகவும் அகலமான கிரில் அமைப்பானது கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்ட மதியில் மெர்சிடஸ் பென்ஸ் லோகோ புதிய கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது பின்புறத்திலும் எல்இடி லைட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை இந்த கார் ஆனது பெறுகின்றது.
இன்டீரியரில் GLA மாடலைப் போன்றே இந்த காரிலும் இரட்டை ஸ்கிரீன் ஆனது கொடுக்கப்பட்டு 10.25 சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது மூன்று ஸ்போர்ட் கொண்ட ஸ்டேரிங் வீல், ஆம்பியர் லைட்டிங் பெற்று இருக்கின்றது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட், பார்க்கிங் அசிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
EQA 250+ எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 188bhp பவர் மற்றும் 385Nm டார்க்கினை வெளிப்படுத்தும் ஒற்றை மோட்டார் ஆனது பயன்படுத்தப்பட்டு 70.5KWh லித்தியம் பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது முழுமையான சிங்கிள் சார்ஜ் இல்ல 560 கிலோமீட்டர் (WLTP) ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 10 முதல் 80 சதவீத சார்ஜிங்கை 100Kw DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் பொழுது 35 நிமிடங்கள் போதுமானதாகும். இந்த காரில் 11 கிலோ வாட் ஏசி சார்ஜர் ஆனது கொடுக்கப்படுகின்றது.