ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவன முதல் எலக்ட்ரிக் பைக் குறித்தான டிசைன் வரைபடமானது தற்பொழுது காப்புரிமை பெறப்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள படம் முதன்முறையாக ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது.
தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தான் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை ஆர்இ நிறுவனம் வடிவமைத்து வருவதாக புதிய காப்புரிமை பெறப்பட்ட படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.
முன்புறத்தில் கிர்டர் போர்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது இது ஒரு பழமையான ஒரு தொழில்நுட்பத்தை நினைவுபடுத்துகின்றதாக அதே நேரத்தில் பியூவல் டேங்க் பகுதியானது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனேகமாக அதில் லக்கேஜ் ஸ்டோர் செய்யப்படுவதற்கான வசதிகள் வழங்கப்படலாம் அதற்கு கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி அமைப்பில் ஃபின்சுகள் கொடுக்கப்பட்டு ICE மோட்டார் சைக்கிளில் உள்ள மாடலை போலவே அந்த ஃபின்சுகளானது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மோட்டாரில் இருந்து பெறப்படுகின்ற பவர் ஆனது பின்புற டயர்களுக்கு பெல்ட் டிரைவ் மூலம் கொண்டு வரப்படுவதாக இங்கே குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் அப்பர் ஸ்விங்காரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி ஏறக்குறைய உற்பத்தியை எட்டும் வகையிலான படமாக தான் காட்சி தருகின்றது. பெரிய அளவில் இதனுடைய டிசைன அமைப்பில் மாறுதல்கள் இல்லாமல் விற்பனைக்கு வரக்கூடும்
மேலும் இந்த மாடலின் இருக்கை அமைப்பானது ஒற்றை ஆக கொடுக்கப்பட்டிருக்கின்றது பின்புறத்தில் சற்று உயரமான ஃபிரேம் ஆனது கொடுக்கப்பட்டு இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு சேரி கார்டு போன்றவை எல்லாம் கொடுக்கும் வகையிலான அமைப்புகள் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு முதல் எலக்ட்ரிக் பைக் 2025 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.