சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் இந்தியாவில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் தனது எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் எப்பொழுது விற்பனைக்கு வரும் தொடர்பான எந்த உறுதியான தகவலும் வெளியிடவில்லை.
மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சீன சந்தையில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதால் தற்பொழுது இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் பற்றி சில முக்கிய விபரங்களை தற்பொழுது அறிந்து கொள்ளலாம்.
சியோமி SU7 காரில் 73.6kwh, 94.3kWh, மற்றும் 101 kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று இதனுடைய டாப் வெறி அண்ட் 101kwh பேட்டரி கொண்ட மாடலானது அதிகபட்சமாக 800 கிலோமீட்டர் என்று வழங்கும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
SU7 மேக்ஸ் 101 kWh பேட்டரி பெற்ற இரட்டை மோட்டாருடன் ஆல் வீல் டிரைவ் கொண்டுள்ள மாடல் 664 bhp மற்றும் 838 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 668Km ரேஞ்ச் தரவல்ல துவக்க நிலை 73.6 kWh பேட்டரி பெற்ற ஒற்றை மோட்டாருடன் ரியர் வீல் டிரைவ் கொண்டுள்ள மாடல் 295 bhp மற்றும் 400 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
சீனாவில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு தற்பொழுது இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வேண்டும் என்றால் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்படலாம் தற்பொழுது இந்த கார் சியோமி நிறுவனம் இந்தியாவில் பத்தாண்டுகளை கொண்டாடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக சியோமி இன்றைக்கு ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனை ரூ.12,999 ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.