ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தொடர்பு உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “செல்வப்பெருந்தகை ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள செல்வப்பெருந்தகை “என்னை சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்று கூறிய […]