கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ள் 2024 சொனெட் எஸ்யூவி மாடலில் சில மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.9.60 லட்சத்தில் HTK டர்போ பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில வேரியண்டுகளில் கூடுதலான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் ஜிடிஎக்ஸ் வேரியண்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சொனெட்டில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 118 hp பவருடன் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கின்றது.
GTX வேரியண்டில் டிரைவ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் மோட், லெதெரெட் இருக்கை, காற்றோட்டமான இருக்கைகள், பேடல் ஷிஃப்டர், 360 டிகிரி கேமரா உடன் சர்வுன்ட் வியூ மானிட்டர் வசதி , தானாக மேல்/கீழ் இறங்கும் கண்ணாடிகள் உள்ளன.
HTE, HTE (O) மற்றும் HTK போன்ற அனைத்து வகைகளிலும் இப்போது Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் புள்ளிகளைப் பெற்றுள்ளன.
HTK+ வகையில் இப்போது எல்இடி ஹெட்லேம்ப், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து, HTX மாடலில் வயர்லெஸ் மொபைல் சார்ஜர், 16-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் பின்புற வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய வேரியண்டுகளின் விலை பட்டியல் பின்வருமாறு ;-
Sonet | |||
Variant | Engine | Transmission | Price – EX-Showroom Pan India (INR) |
HTK | G1.0 TGDi | iMT | 959,900 |
GTX | 1.0 TGDi GTX | 7DCT | 1,370,900 |
1.5 CRDi GTX | 6AT | 1,455,900 |
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வேரியண்ட் உடன் சேர்த்து தற்பொழுது கியா சொனெட் வேரியண்டுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.