அண்மையில் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சேவைக்கான கட்டணங்களை அதிகரித்திருந்தன. செல்போன் பயன்படுத்துபவர்களின் செலவு கணிசமாக அதிகரித்தன. வோடாபோன், ஏர்டெல், ஜியோ என தொலைதொடர்புத்துறையின் முக்கிய நிறுவனங்கள், மொபைல் ரீச்சார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், வோடாபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
வோடாபோன் புதுப்பிக்கப்பட்ட ரீசார்ஜ் பிளான்கள்
Vi புதிய ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், தற்போது வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய REDX திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை 1201 ரூபாய். மட்டுமே. இந்தத் திட்டத்தில் செல்போன் பயன்பாட்டைத் தவிர, உங்கள் பொழுதுபோக்கு ஆர்வத்திற்கும் வோடாபோன் தீனிபோடுகிறது. அந்த புதிய திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
REDX போஸ்ட்பெய்ட் திட்டம்
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் REDX போஸ்ட்பெய்ட் திட்டமானது, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
வோடபோன் ஐடியா (Vi) REDX போஸ்ட்பெய்ட் திட்டம்
புதிய Vodafone Idea (Vi) REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாத சந்தா ரூ.1201 மட்டுமே. இதற்கு முன்னதாக REDX போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ 1101 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அற்கு பதிலாக, ரூ.1201 திட்டம் கொண்டுவரப்பட்டது.
பழைய திட்டத்தின் புதிய வடிவம்
ரூ.1101 என்ற REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை வோடாபோன் உயர்த்தியுள்ளது. அதாவது. இப்போது இந்த திட்டத்தைப் பெற ரூ.1201 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். விலையில் REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பெறலாம். விலை அதிகரிப்பு என்ற மாற்றத்தைப் போலவே, அதில் கொடுக்கப்படும் வசதிகளையும் வோடாபோன் நிறுவனம் அதிகரித்துள்ளது.
1201 ரூபாய் Vodafone Idea (Vi) REDX திட்டம்
REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எவ்வளவு அழைப்புகளை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், அதாவது வரம்பற்ற அழைப்புகள் என்ற அம்சம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதோடு, வரம்பற்ற தரவு அணுகலும் உள்ளது. இலவசமாக மூவாயிரம் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
பொழுதுபோக்கு நன்மைகள்
REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தில் Netflix Basic, Amazon Prime ஆகிய ஓடிடி அணுகல்களுடன், Disney + Hotstar, SonyLIV Premium, SunNXT போன்ற தளங்களுக்கு சந்தாவும் இலவசமாக கிடைக்கும். இந்த அணுகல், Disney Plus Hotstar மற்றும் SonyLIV இன் சந்தா 1 வருடம் வரையிலும், பிறவற்றிற்கு 6 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
வோடோபோன் REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இருந்து விலகினால் அபராதம்
இந்தத் திட்டத்தை தெரிவு செய்த 180 நாட்களுக்கு முன் மூட விரும்பினால், 3000 ரூபாய் செலுத்த வேண்டும். 180 நாட்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை மூடினால், எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் லாபம் கொடுக்கும் திட்டம் இது.