இந்திய சந்தையில் இரண்டு விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள EQB 350 மற்றும் EQB 250+ மெர்சிடிஸ்-பென்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் ஆனது ரூபாய் 70.90 லட்சத்தில் தொடங்குகின்றது. ஐந்து மற்றும் ஏழு இருக்கை EQB 250+ என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்ற இந்த மாடல் ஆனது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடலில் இருந்து சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றிருக்கின்றது.
ஏஎம்ஜி சார்ந்த ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள EQB 350 4Matic AWD இரட்டை மோட்டார் அமைப்புடன் வழங்கப்படுகிறது, இதன் அதிகபட்ச பவர் 284 bhp மற்றும் 520 Nm டார்க்கை வெளிப்படுத்தும். மறுபுறம், EQB 250+, 185 bhp மற்றும் 385 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்ற ஒற்றை மோட்டார் அமைப்பால் இயக்கப்படுகிறது.
இரண்டு மாடல்களும் பொதுவாக 70.5 kWh திறன் கொண்ட பேட்டரியைப் பெறுகின்றனது. இது EQB 250+ காரின் ரேஞ்ச் 535 கிமீ வரை வழங்குகிறது, EQB 350ல் 447 கிமீ வரை ( WLTP) வழங்கும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.
MBUX இன்ஃபோடெயின்மென்ட் UI, டால்பி அட்மோஸுடன் கூடிய பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், இரட்டை மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா, ADAS லெவல் 2 பாதுகாப்பு தொகுப்பு, 19-இன்ச் ஏஎம்ஜி அலாய் வீல் மற்றும் ஏழு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது.
- Mercedes-Benz EQB 350 – ₹ 77.50 லட்சம்
- Mercedes-Benz EQB 250+ – ₹ 70.90 லட்சம்
DC ஃபாஸ்ட் சார்ஜர், EQB மாடல் 32-35 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். 11kW AC சார்ஜருடன் EQB350 4Matic வேரியண்ட் முழுவதுமாக சார்ஜ் செய்ய சுமார் 6 மணிநேரம் 45 நிமிடங்கள் ஆகும், மேலும் 250+ டிரிம் ஆனது 7 மணிநேரம் 15 நிமிடங்கள் ஆகும்.