இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை ஆனது 2025 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள மாடலானது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது.
இந்தியாவில் கோடியாக்கின் 7 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு கோடியாக்கில் 7% நன்மை வழங்கப்படுகிறது. இந்த சலுகை 18 ஜூலை, 2024 முதல் 24 ஜூலை 2024 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இயங்கும்
2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 188 bhp மற்றும் 320Nm டார்க்கினை வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி காரில் DSG ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆனது பொருத்தப்பட உள்ளது. CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்யப்படாமல் இந்திய சந்தையில் ஒருங்கிணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
ஐரோப்பா சந்தையில் கிடைக்கின்ற மாடலை போலவே அமைந்திருக்கும் இன்டீரியரில் புதுப்பிக்கப்பட்ட 13 அங்குள்ள ஃப்ரீ ஸ்டேண்டிங் தொடுத்திரை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் மற்றும் முழுமையான டிஜிட்டல் கிளஸ்டர் பெற உள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட கூடுதலான பூட்ஸ்பேஸ் கொண்டுள்ள புதிய கோடியாக்கில் தற்பொழுது 340 லிட்டர் லக்கேஜ் ஸ்பேஸ் ஆனது கிடைக்கின்றது. 7 இருக்கைகளைக் கொண்டு மிகவும் ஆடம்பரமான வசதிகள் மற்றும் உயர் தரமான பாதுகாப்பினை கொண்டிருக்கின்றது
தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கோடியாக் மாடல் ஆனது L&K வேரியண்ட் மட்டும் ரூபாய் 40 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஸ்கோடா இந்தியா நிறுவன பிரத்தியேகமான இந்திய சந்தைக்கான நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் ஒன்றை தயாரித்து வருகின்றது. இந்த மாடல் ஆனது ஜனவரி 2025ல் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதனால் அதனை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கோடியாக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகலாம்.