பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, பாசிப் பயறு 1 கிலோ கிராம் 998 ருபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு 1 கிலோ கிராம் 205 ருபாவாகவும், சிவப்பு சீனி 1 கிலோ கிராம் 375 ருபாவாகவும் மற்றும் வெள்ளை சீனி 1 கிலோ கிராம் 263 ருபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, அரசுக்கு சொந்தமான ஒரேயொரு பல்பொருள் விற்பனை சங்கிலியான லங்கா சதொச நிறுவனம் இவ்வாறு பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (10) முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.