ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற குறைந்த விலை எக்ஸ்ட்ர் எஸ்யூவி மாடலின் சிறப்பு நைட் எடிசனை விற்பனைக்கு வெளியாவதை உறுதி செய்யுமாறு முதல் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. சந்தையில் கிடைக்கின்ற டாடா பன்ச் எஸ்யூவி காருக்கு கடுமையான சூழ்நிலை ஏற்படுத்துகின்ற எக்ஸ்ட்ர் ஆனது மற்ற போட்டியாளர்களான நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் உள்ளிட்டவற்றுடன் பல்வேறு காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கும் சவாலினை ஏற்படுத்துகின்றது.
அடிப்படையில் உள்ள டாப் வேரியண்ட் அடிப்படையில் வெளியிடப்பட உள்ள இந்த நைட் எடிசன் ஆனது கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக அமைந்திருக்கும் ஏற்கனவே நைட் எடிசன் ஆனது வெனியூ, கிரெட்டா என சில மாடல்களில் கிடைக்கின்றது. குறிப்பாக நைட் எடிசனில் சிவப்பு நிற கார்னீஷ் மற்றும் பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதலாக Knight Edition என்ற பேட்ஜ் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.
Hyundai Exter Knight Edition teased
எக்ஸ்ட்ர் காரின் எஞ்சின் ஆப்ஷனில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 4 சிலிண்டர் கொண்ட எக்ஸ்டர் மாடல் அதிகபட்சமாக 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
முதல் முறையாக டீசர் வெளியிடப்பட்டுள்ளது அடுத்த சில நாட்களுக்கு விற்பனைக்கு வெளியாகலாம். மேலும், இந்த மாத இறுதிக்குள் டெலிவரி தொடங்கப்படலாம்.