உங்கள் வாழ்க்கையில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர ஸ்ரீருத்ர ஹோமம் உதவும். மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் உதவும். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் தேக்கங்கள், அடிக்கடி உண்டாகும் மன – உடல் பிரச்னைகள் யாவையும் நீங்க ஸ்ரீருத்ர ஹோமம் உதவும்.
2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
உங்களுக்கு வாழ்க்கையில் என்னன்ன தேவையோ அது அத்தனையும் பெற்றுத் தரும் ஒரே வழிபாடு ஸ்ரீருத்ர ஹோமம். மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த ருத்ர ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் தேக்கங்கள், அடிக்கடி உண்டாகும் மன – உடல் பிரச்னைகள் யாவையும் நீங்க இந்த ஸ்ரீருத்ர ஹோமம் உதவும்.
சிறப்பு வாய்ந்த ஸ்ரீருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலயத்தின் சார்பில் சிவஸ்ரீ செந்தில்குமார் மேலும் கூறியது…
‘திருவாடுதுறை ஆதினம் குருமகா சன்னிதானத்தின் பெரும் குருவருளாலும், சிவபெருமானின் திருவருளாலும், நாயன்மார்களின் வரலாறுகளைப் பின்பற்றி, அடியேனுடைய பூர்விக இல்லத்திலே, ‘ஶ்ரீஅண்டவானர் அருள் துறை’ என்ற திருநாமம் தாங்கி, ஶ்ரீ அன்பிற்பிரியாள் உடனமர் ஶ்ரீ அண்டவானப் பெருமான் ஆலயம் அமைத்துள்ளோம். மேலும் அருள்மிகு சிவகாமி உடனமர் ஞானக்கூத்தப் பெருமானை எழுந்தருளச் செய்தும், சோமஸ்கந்த பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள், சந்தானக் குரவர்களை நிறுவி வழிபட்டும், கோசாலை ஒன்றையும் இறைவன் திருவருளால் நடத்தி வருகின்றோம்.
பொதுமக்கள் இங்கு இன, மொழி, மத பேதமின்றியும், எவ்வித ஏற்றத் தாழ்வின்றியும் வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக நித்தியக் கோபூஜை, நித்திய சிவபூஜை, பிரதோஷ வழிபாடு ஆகியவற்றைச் செய்து வருகிறோம். அவை போக வாரந்தோறும் திருமுறை பாராயணம், சாஸ்திர, பரத நாட்டிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கோடைகாலங்களில் ‘சம்மர் கேம்ப்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு சைவ வழிபாடுகளைப் பற்றியும், சமய நெறிமுறைகள் பற்றியும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம். இங்கு திருஞானச் சம்பந்தப் பெருமான் குரு பூஜையும், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதி உலாவும், பஞ்சமூர்த்திப் புறப்பாடுகளும், அருள்மிகு சிவகாமித் தாய் உடனமர் ஞானமாக் கூத்தப்பெருமானுக்கு உரிய ஆறு அபிஷேகங்களும் அந்தந்தக் காலங்களில் இன, மொழி, மத வேறுபாடின்றி மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்து வருகிறார்கள். தற்போது இலுப்பை மரத்திலே ஞானமாக்கூத்தப் பெருமானுக்கு திருவாதிரை வைரத் திருத்தேர் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
‘எதிர்வரும் 21-ம்தேதி பௌர்ணமி நன்னாள் அன்று ‘சக்தி விகடன்’ சார்பில் நடக்கவிருக்கும் ருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களை ருத்ர ஹோமத்திலும், அண்டவானப் பெருமானிடத்தும் வைத்து வழிபட்டு தெய்வத் திருவருள் கிடைக்கப் பெற வருக வருக என வரவேற்கிறேன்.’ என்றார்.
இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் உங்களின் பூர்வ ஜன்மப் பாவங்கள் பொசுங்கி, நன்மையான பலன்கள் உண்டாகும். மேலும் உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களுக்கோ எதிர்பாரா விபத்துக்கள் ஏற்படுதல், மரண பயம் உண்டாதல், எதிரிகள் தொல்லை போன்றவற்றை நீங்குகிறது. பஞ்சாட்சர மந்திர பாராயணமும், பதிகம் ஓதுதலும், ஸ்ரீருத்ர மந்திர ஜபமும், ஸ்ரீருத்ர ஹோமமும் எந்தவித கிரக தோஷங்களையும் நீக்கிவிடும் என்பதை அறிந்திருப்பீர்கள். பிரச்னை என்று ஒன்று வந்தால் அதற்குத் தீர்வு என்றும் ஒன்று இருக்கும். எனவே தோஷங்களால் கவலை கொண்டோர், இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள இந்த QR CODE பயன்படுத்திக் கொள்ளவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.