ஹூண்டாய் இந்தியாவின் சிறிய எஸ்யூவி மாடலான எக்ஸ்ட்ர் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு முன்னிட்டு புதிய சிறப்பு நைட் எடிசன் (Knight Edition) ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரூபாய் 8.38 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த காரில் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
டாடா பன்ச் எஸ்யூவி சவால் வெடிக்கின்ற இந்த மாடல் ஆனது முதல் ஆண்டில் 93 ஆயிரத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது விற்பனையில் உள்ள மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 4 சிலிண்டர் கொண்ட எக்ஸ்டர் மாடல் அதிகபட்சமாக 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
2024 Hyundai Exter Knight Edition price list:
Transmission | Variant | Ex-showroom |
MT | SX | Rs. 8. 38 லட்சம் |
SX Dual-tone | Rs. 8.62 லட்சம் | |
SX (O) Connect | Rs. 9.71 லட்சம் | |
SX (O) Connect Dual-tone | Rs. 9.86 லட்சம் | |
AMT | SX | Rs. 9.05 லட்சம் |
SX Dual-tone | Rs. 9.30 லட்சம் | |
SX (O) Connect | Rs. 10.15 லட்சம் | |
SX (O) Connect Dual-tone | Rs. 10.43 லட்சம் |
அபிஸ் பிளாக் மற்றும் ஷேடோ கிரே என இரு நிறங்களை பெற்று SX & SX(O) Connectகருப்பு நிறத்தைக் கொண்டுள்ளகாரில் பக்க சில் அலங்காரம், முன் பம்பர் மற்றும் டெயில்கேட்டில் சிவப்பு பூச்சூ, சிவப்பு பிரேக் காலிப்பர்கள், கருப்பு முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. SX(O) கனெக்ட் கருப்பு அலாய் வீல்கள், கருப்பு ஹூண்டாய் மற்றும் எக்ஸ்டர் பேட்ஜ்கள் மற்றும் நைட் எடிசன் பேட்ஜ் உள்ளது.
உட்புறத்தில், மாறுபட்ட சிவப்பு இன்ஷர்ட் மற்றும் தையல், சிவப்பு ஃபுட்வெல் லைட்டிங், கருப்பு சாடின் உட்புற கதவு கைப்பிடிகள் மற்றும் ஸ்டீயரிங், மெட்டல் ஸ்கஃப் பிளேட், ஃப்ளோர் மேட்களில் சிவப்பு தையல் மற்றும் சிவப்பு தையல் மற்றும் பைப்பிங் கொண்ட புதிய நைட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் முழு கருப்பு தீம் பெறுகிறது.