இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களையும், எளிதில் கண்டுபிடிக்க, உதவும் சிசிடிவியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் சிசிடிவி என்னும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம், பல்வேறு குற்ற சம்பவங்களையும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களையும் எளிதில் அடையாளம் கண்டு பிடித்து விடலாம்.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புக்கு சிசிடிவி மிக முக்கியமானதாகிவிட்டது.
சிசிடிவி கேமரா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் சிசிடிவி கேமரா பொருத்துவதால், பயன் இல்லை. சரியான முறையில் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பொழுது அதனால், பயன் கிடைக்காமல் போகும் உள்ளது. இந்நிலையில் சிசிடிவி கேமராக்களை வாங்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
சிசிடிவிக்கான தேவை மற்றும் இடம்
முதலில் கேமராவை எங்கு நிறுவ வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். வீடு, அலுவலகம், கடை, பார்க்கிங் என நீங்கள் சிசிடிவி பொருத்த விரும்பும் இடத்திற்கு ஏற்ற வகையிலான கணகாணிப்பு கேமிராவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கேமரா வகையை தேர்ந்தெடுத்தல்
நீங்கள் உட்புற உபயோகத்திற்காக ஒரு கேமராவை வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு டோம் கேமராவை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். புல்லட் கேமிரா வெளிப்புறங்களுக்கு சிறந்தது. பெரிய இடங்களுக்கு கேமராக்களை வாங்குவது மற்றும் அதிக பகுதிகளைகவர் செய்ய வேண்டும் எனில், பான்-டில்ட்-ஜூம் (PTZ) வகை கேமராக்களை வாங்கவும். அவை பான் மற்றும் ஜூம் செய்ய முடியும்.
இணைய இணைப்பு உள்ள கேமிராக்கள்
இது தவிர, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கேமராவின் நேரடி காட்சிகளை பார்க்க விரும்பினால், ஐபி கேமராவை வாங்க வேண்டும். இதில் இணைய இணைப்பு இருக்கும். இதன் மூலம் நீங்கள் பயன்பாட்டில் நேரடியாக நடப்பதை பார்க்க முடியும். ஆனால் நேரடி பீட் தேவையில்லை என்றால், காட்சிகளை ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்யலாம். வயர்லெஸ் கேமராக்கள் இப்போது 4G சிம் கார்டுகளுடன் கிடைக்கின்றன.
ரெசல்யூஷன் மற்றும் இரவில் கண்காணிக்கும் திறன்
ரெசல்யூஷன் அளவை பொருத்தவரை உங்களுக்கு 720p, 1080p அல்லது 4K வேண்டுமா என உங்கள் தேவைக்கேற்ப கேமராவின் தெளிவுத்திறனையும் சரிபார்க்கவும். இரவில் கூட கண்காணிப்பு தேவைப்பட்டால் இரவு பார்வை அம்சம் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யவும்.
கண்காணிப்பு கேமிராவில் உள்ள சேமிப்பகம்
கேமிராவில் இன்பில்ட் சேமிப்பிடம் (SD கார்டு, DVR) அல்லது கிளவுட் சேமிப்பகம் எவ்வளவு உள்ளது என்பதை முன்பே சரிபார்க்கவும். கிளவுட் சேமிப்பகம் கட்டணம் அதிகம் கொண்டதாக இருக்கலாம் ஆனால் அதை எங்கிருந்தும் அணுகும் வசதியை கொண்டிருக்கும்.
கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு
கண்காணிப்பில், கேமிராவில் சிக்கும் எந்த ஒரு இயக்கத்தையும் கண்டறிந்து எச்சரிக்கை அமைப்பு சிறப்பாக இருந்தால், எந்த ஒரு இயக்கத்தையும் பற்றிய உடனடித் தகவலைப் பெறலாம்.
பிராண்ட் மற்றும் நம்பகத்தன்மை
சிசிடிவி கேமராக்களை வாங்கும் போது, அவற்றின் தரம் மற்றும் சேவையை உறுதிசெய்யும் வகையில் நம்பகமான பிராண்டுகளிடமிருந்து மட்டுமே கேமராக்களை வாங்க வேண்டியது அவசியம்.