சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி இவி எப்பொழுது அறிமுகம் என்பதை இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். ஐரோப்பா சந்தையில் தனிநபர் பயன்பாடுகளுக்கான வாகனம் 2021 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு இந்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியான பயன்பாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்ற ஜிம்னி மாடல்களின் விற்பனையும் சுசுகி நிறுத்துகின்றது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஐந்து டோர் மாடல் ஜிம்னி போல அல்லாமல் ஐரோப்பா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மூன்று கதவுகளை கொண்ட ஜிம்னியில் பிரத்தியேகமான Jimny Horizon edition சிறப்பு வண்ண தோற்றத்துடன் கவர்ச்சிகரமான பாடி கிராபிக்ஸ் கொண்டு இரண்டு இருக்கைகளை மட்டும் கொண்டு வர்த்தக ரீதியான மாடலாகவே விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தியாவில் ஜிம்னி காருக்கு பெரிய அளவிலான வரவேற்பு இல்லை தொடர்ந்து தார் எஸ்யூவி சிறப்பான மாடலாக ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாகவும் விளங்கி வருகின்றது. ஆனால் இந்திய சந்தையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு மாருதி சுசுகி நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகின்ற ஐந்து கதவுகளை கொண்ட ஜிம்னி தற்போது வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 யூனிட்டுகளை தற்போது விற்பனை ஆகின்றது. மேலும் தொடர்ந்து பல்வேறு மாதங்களாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது இந்த மாதம் அதிகபட்சமாக 2.85 லட்சம் வரை கூட சலுகைகளை அறிவித்துள்ளது.
சுசூகி ஜிம்னி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக 2026 அல்லது 2027 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்படலாம்.