புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேற்கொண்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி இன்று (11) நள்ளிரவு 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் தொழிற்சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

 

அத்துடன், பணிக்கு வராத அதிகாரிகள் யாராவது இருப்பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இக் கலந்துரையாடல், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.