புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளினால் மக்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணத்துங்க இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று புகையிரதத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்தவர் கம்பஹா பெம்முள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
நாட்டின் பொருளாதார சிக்கல்களுடன் இவ்வாறானவைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டு மக்கள் பெருமளவில் இந்த நிலையை புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.