மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், இந்திய கூட்டணி எழுப்பும்: ராகுல்காந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர் மக்களின் நிலை குறித்து எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது;

வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.

பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும்.”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.