இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், முதலாவது போட்டி ஜூலை 26 ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்திலும், ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.