கிருஷ்ணகிரி: ”தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி” என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அண்ணாமலை, “அவர் ஒரு ரவுடி. அவருக்கு எல்லாம் தெரியும். அவரை விசாரிக்க வேண்டும்” என்ற ரீதியில் சொல்லியிருந்தார். […]