இடைத்தேர்தல் 2024 | இண்டியா கூட்டணி 1-ல் வெற்றி, 10-ல் முன்னிலை; என்டிஏ 2-ல் முன்னிலை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏழு மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் சட்டப்பேரவைத் தொகுதியில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 10-ல் முன்னிலை வகிக்கின்றன. என்டிஏ 2 இடத்தில் முன்னிலை வகிக்கின்றது.

பிஹார், மேற்குவங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணி நிலவரப்படி விபரங்கள்:

> பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொகிந்தர் பாகத் வெற்றி பெற்றுள்ளார்.

> மேற்கு வங்கத்தின் நான்கு தொகுதிகளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50,023 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேபோல், ரானாகட் தக்ஷினில் டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி 30,081 வாக்குகள் வித்தியாசத்திலும், பாக்தாவில் போட்டியிட்ட மதுபர்னா தாகுர் 20,884 வாக்குகள் வித்தியாசத்திலும், மணிக்தாலாவில் போட்டியிட்ட சுப்தி பாண்டே 28,781 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளனர்.



>தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் திமுக தொடர்ந்து வெற்றி உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 60,000+ வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

> மத்தியப்பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தீரன் ஷா சுகாராம் தாஸ் இன்வாடி 5,634 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

> உத்தராகண்டின் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் வேட்பாளர் லகபத் சிங் புடோலா முன்னிலையில் உள்ளார். மங்களூரு தொகுதியில், காசி முகம்மது நிஜாமுதீன் 87,365 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

> இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகின்றன. இங்குள்ள தேக்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வர் சுக்விந்தரின் மனைவியுமான கமலேஷ் தாகுர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 6,115 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

நலகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், ஹர்தீப் சிங் பாவா 3,548 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஹமிர்பூர் தொகுதியில் பாஜகவின் ஆஷிஷ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளிவிட்டு 743 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

> பிஹாரின் ருபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.