விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி பலியான பட்டாசு தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமாக ‘சுப்ரீம்’ எனும் பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்தஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில், மருந்து மூலப்பொருட்கள் அறையில் பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலக்கும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதில், ஏற்பட்ட மருந்து உராய்வு காரணமாக எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த அறை முழுவதுமே வெடித்து தரைமட்டமானதில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் வெள்ளூரை சேர்ந்த மாரியப்பன்(வயது 45), முத்து முருகன்(45) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும், சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா(55), செவலூரை சேர்ந்த சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெடிவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பட்டாசு தொழிலாளி சரோஜா நள்ளிரவிலும், மற்றொருவரான சங்கரவேல் இன்று அதிகாலையிலும் உயிரிழந்தனர். இதனால் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது ன. வெடிவிபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88