மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், பணியில் சேருவதற்கு முன்பே தனக்கு தனியாக வீடு, கார், அலுவலம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதோடு பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை அபகரித்தது, காரில் சிவப்பு, ஊதா விளக்கு மாட்டிக்கொண்டது என்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியதால் அவர் உடனே வாசிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இச்சர்ச்சைகளால் அவர் மீதான பழைய புகார்கள் புத்துயிர் பெற ஆரம்பித்தது. 2022ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்ற பூஜா தான் பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி சான்றிதழ் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் குறைந்த மதிப்பெண் பெற்று இருந்த பூஜாவிற்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. பணியில் சேரும் முன்பு மாற்றுத்திறனாளி என்பதை நிரூபிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் பூஜா பல்வேறு காரணங்களை கூறி அவ்வாறு பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பணி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு முறை மட்டும் பரிசோதனைக்கு சென்றார். அதிலும் முழுமையாக பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி பிரச்னை மட்டுமல்லாது சாதிச்சான்றிதழிலும் மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிரேமி லேயர் வகுப்பை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு இருந்தார். கிரேமி லேயர் வகுப்பை சேர்ந்தவர் 8 லட்சத்திற்கு குறைவான வருமானம் பெறுபவராக இருக்கவேண்டும். ஆனால் பூஜாவின் தந்தைக்கு 40 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜாவிற்கும் 17 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பூஜா மீதான இரண்டு புகார்கள் குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கிறது. மத்திய அரசு நடத்தி வரும் விசாரணை அறிக்கை விபரம் மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு பூஜாவை பணி நீக்கம் செய்யலாம் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் பூஜா மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
வருமானத்தை குறைத்துக்காட்டி மோசடி செய்தது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்க மத்திய பணியாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் பூஜாவின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88