விவசாய தொழில் துணைவோர் கிராமம்' ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக ஆரம்பம்..

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில்  ‘விவசாய தொழில் துணைவோர் கிராமம்’ என்ற திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் சிபாரிசின் பேரில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்காக ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 120 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, ‘விவசாய தொழில் துணைவோர்’ தொடர்பான தெளிவூட்டலை வழங்கும் நிகழ்வு (12) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.