டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களை தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி பீகார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. […]