உங்கள் ஃபோனில் உள்ள சிம் கார்டை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் கூட அழைப்புகளை செய்ய முடியும் என்பது பலருக்கு தெரியாது. ஆம், வைஃபை காலிங் என்ற அம்சம் போனில் உள்ளது. இந்த அம்சம் வைஃபை இணைப்பின் அடிப்படையில் அழைப்புகளைச் மேற்கொள்ள அனுமதிக்கிறது. இன்றைக்கு சந்தையில் அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்த அம்சத்துடன் வருகின்றன. உங்கள் தொலைபேசி எண்ணில் ரீசார்ஜ் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட, இந்த சிறப்பு அம்சத்தின் உதவியுடன் நீங்கள் யாரையும் அழைக்கலாம்.
வைஃபை காலிங்-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வைஃபை அழைப்பைப் பயன்படுத்த, உங்களிடம் வலுவான வைஃபை இணைப்பு இருக்க வேண்டும். Wi-Fi நெட்வொர்க்கில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் கூட, அழைப்பு துண்டிக்கப்படும். தொலைபேசியில் வைஃபை அழைப்பு வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு (Android ) போனில் வைஃபை அழைப்பை (WiFi Calling) மேற்கொள்வது எப்படி ?
1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் என்ற பிரிவுக்கு செல்ல வேண்டும்.
2. இதன் பிறகு Network and Internet ஆப்ஷனுக்கு செல்லவும்.
3. இதில் நீங்கள் சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்கிற்கு (SIM Card and Mobile Network ) செல்ல வேண்டும்.
4. இதன் பிறகு உங்கள் தொலைபேசியில் உள்ள சிம் காண்பீர்கள்.
5. நீங்கள் அழைப்பிற்காக பயன்படுத்தும் சிம்மில் டாட் செய்யவும்
6. இப்போது இங்கே நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்தால் Wi-Fi Calling விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.
7. அதில் நீங்கள் Wi-Fi Calling என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பிறகு, Wi-Fi இணைப்பு மூலம் உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் எளிதாக அழைக்க முடியும்.
ஐபோன் தொலைபேசியில் வைஃபை அழைப்பை (WiFi Calling) எப்படி மேற்கொள்வது?
1. ஐபோனில் வைஃபை அழைப்பு வசதியை பெற, நீங்கள் முதலில் Setting பிரிவிற்கு செல்ல வேண்டும்.
2. இதற்குப் பிறகு அதில் Phone என்ற பிரிவிற்கு செல்லவும்.
3. இங்கே நீங்கள் வைஃபை அழைப்பு (Wi-Fi Calling) என்ற ஆப்ஷனை பார்ப்பீர்கள்.
4. Wi-Fi அழைப்பு வசதியை ஆன் செய்வதன் மூலம், Wi-Fi இணைப்பு மூலம் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
வைஃபை அழைப்பு பயன்படுத்துவதால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள்
நன்மைகளைப் பற்றி பேசுகையில், தொலைபேசி ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் இந்த அம்சத்தின் மூலம் அழைப்பை அனுபவிக்க முடியும். நல்ல Wi-Fi நெட்வொர்க் சிறந்த அழைப்பு தரத்தை வழங்குகிறது. அதே சமயம் தீமைகள் என்று பார்த்தால் இந்த வசதி குறைவாகவே உள்ளது. நல்ல வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மட்டுமே வைஃபை அழைப்பை அனுபவிக்க முடியும். மோசமான இணைப்பு காரணமாக அழைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படலாம்.