விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது

Virat Kholi News Latest Tamil : டி20 உலகக்கோப்பையில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், அவரின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது ஆபத்தில் தான் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றதால், விராட் கோலியின் இடம் இனி இந்திய அணியில் சந்தேகமே. ஏனென்றால், இருவருக்கும் எப்போதுமே செட்டாகாது. அடிக்கடி வாய்ச்சண்டையில் ஈடுபட்டுக் கொண்ட இருவரும் அண்மைக்காலமாக தான் சுமூகமான உறவோடு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணியில் இருவரும் எப்படி சேர்ந்து விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், விராட் கோலியால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த இரண்டு நட்சத்திர வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

1. யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர் என்றால் யுவராஜ் சிங் தான். அவர் இந்திய அணிக்காக அளித்த பங்களிப்பு என்பது அளப்பரியது. 15 வயது, 19 வயது, டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என எல்லா கோப்பைகளும் இந்திய அணி வென்றபோது, அந்த அணியில் இடம்பிடித்த ஒரே பிளேயர் இவர் தான். சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் சிங், எம்எஸ் தோனி தலைமையில் விளையாடினார். கடைசியாக விராட் கோலி தலைமையில் விளையாடினார். ஆனால் அப்போது பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவ்ராஜ் சிங். 

2. சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி இருந்தபோது, அந்த அணியில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தவர் சுரேஷ் ரெய்னா. தோனியின் தளபதியாக பார்க்கப்பட்ட இவர், இந்திய அணிக்காக பலமுறை தனியொரு ஆளாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர். 2011 ஆம் ஆண்டு உலக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவர் பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியிலும் இடம்பிடித்து ஆடினார். ஆனால், சரியான வாய்ப்புகள் முன்புபோல் கிடைக்கவில்லை. கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடிய சுரேஷ் ரெய்னா 2020 ஆம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அடுத்த நொடியில் தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இந்த இரண்டு பிளேயர்களுக்கும் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களின் பார்ம் ஒரு காரணமாக இருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டதால் முன்கூட்டியே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.