Hardik Pandya News tamil : இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது சொந்த ஊரான வதோதராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட பாண்டியா வழிநெடுகிலும் ரசிகர்களை பார்த்து கையசைத்து, நடனமாடி உற்சாகமாக இருந்தார். அவருடன் சகோதரர் குருணால் பாண்டியாவும் இருந்தார். அவரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் பாண்டியாவுடன் நடனமாட, டி20 உலகக்கோப்பை வெற்றி நாயகனுக்கு வரவேற்பு எல்லாம் தடபுடலாகவே வதோதராவில் இருந்தது. ஆனால், இந்த கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்டியா மனைவி ஆப்சென்ட். ஏன்? என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் காரணத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
July 15, 2024
இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாண்டியா தன்னுடைய சகோதரர் குருணால் பாண்டியா மற்றும் தாய் உள்ளிட்டோருடன் ஒன்றாக வசித்து வருகிறார். அவர்களுடனே ஹர்திக் பாண்டியாவின் மகனும் இருக்கிறார். மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கின்றனர். மீண்டும் ஒன்று சேருவார்களா? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் விவாகரத்து குறித்தும் ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிக் மவுனம் காத்து வருகின்றனர். வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை.
நடாஷாவுடன் இப்போது அவருடைய நண்பர் ஒருவர் இருப்பதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி ரெஸ்ட்ராண்டுகளுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர். அப்போது, ஹர்திக் பாண்டியா உடனான விவாகரத்து குறித்து கேட்டபோது எந்த பதிலும் அளிக்காமல் சென்றார் நடாஷா. இந்த சூழலில் கணவர் ஹர்திக் பாண்டியாவின் டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட வீடியோ வைரலாகியிருக்கும் நிலையில், அவருக்கு போட்டியாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் இறக்கியிருக்கிறார் நடாஷா.
View this post on Instagram
வதோதரா சாலையில் திறந்தவெளியில் ரசிகர்கள் உற்சாகமாக ஹர்திக் பாண்டியாவை அழைத்துச் செல்லும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. அதில் உற்சாகத்தின் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், சகோதரர் குருணால் பாண்டியாவுடன் சேர்ந்து ‘சக்தே இந்தியா’ பாடலை பாடுகிறார். இதனை ரசிகர்கள் பலரும் ரசித்த நிலையில், நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் பிரபலமான நீலாம்பரி ஸ்டைலில் உடையணிந்து வீடியோ போட்டிருக்கிறோர். நடாஷா ஸ்டான்கோவிக்குக்கு இயல்பாகவே பேஷன் துறையில் ஈடுபாடு என்பதால், அடிக்கடி இப்படியான வீடியோவை போடுவது வழக்கம். ஆனால், கணவர் கொண்டாட்டத்தில் இருக்கும்போது வில்லி ஸ்டைலில் நடாஷா போட்ட வீடியோ என்பதால் அதுவும் சோஷியல் மீடியாவில் கவனத்தைப் பெற்றுள்ளது.