இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் தீகவாப்பிய தூபியில் புத்தரின் சர்வ ஞானப்பெக்கிஷத்தை ஸ்தாபிக்கும் மங்களகரமான நிகழ்வில் பங்குப்பற்றினர். மதிப்பிற்குரிய பிரமுகர்கள் மற்றும் பக்திமான்கள் கலந்து கொண்ட இந்த புனிதமான நிகழ்வு, இலங்கையின் மத பாரம்பரியத்தின் ஆழமான சான்றாகும்.
இந்த தொடக்க விழாவைத் தொடர்ந்து, வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித தாது சந்நிதியை அனைத்து விருந்தினர்களும் கண்டுகளித்தனர். புத்தபெருமானின் சர்வ ஞானப்பெக்கிஷத்தை பிரதான தாது சந்நிதிக்கு சாம்பிரதாய ஊர்வலமாக பாரம்பரிய மேள தாளத்துடன் இசையுடன் கொண்டுசெல்லும் ஊர்வலத்தில் அனைவரும் கலந்துகொண்டனர். இதன் போது மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகா சங்கத்தினரால் நிர்வகிக்கப்படும் ஐந்து கட்டளைகளை பக்தர்கள் கடைப்பிடித்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வரவேற்பு உரையுடன் சம்பிரதாய நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தொல்லியல் துறையின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டி.துசித மெண்டிஸ், வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வதற்காக, இத்தலத்தின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.
பிரதம அதிதியான ஆயுதப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கௌரவ அதிதிகள் வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, இராணுவப் படையினரின் பங்கேற்புடன் நிர்மாணிக்கப்பட்ட தீகவாப்பிய தூபியின் சந்நிதிக்குள் ஸ்தாபிக்கப்படவுள்ள புத்த பகவானின் சர்வ ஞானப்பெக்கிஷங்களின் ஊர்வலம் ஆரம்பமானது. தீகவாப்பிய விகாரையின் பிரதம பீடாதிபதி வண. மகா ஓய சோபித தேரர் தலைமையிலான தேர்ரகளின் பிரித் பாராயணத்துடன் இந்த புனித நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், முன்னாள் ஜனாதிபதி கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ. விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானியுமான திரு.சாகல ரத்நாயக்க, ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் (பாதுகாப்பு பதவி நிலை பிரதானி), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, முப்படையில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அவர்களது அன்புத் துணைவியர் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மறைந்த அதிவணக்கத்திற்குரிய தாரணகம குசலதம்ம தேரர் நினைவாக கடற்படை படையினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு விடுதி திறப்புடன் விழா நிறைவுபெற்றது. மறைந்த அதிவணக்கத்திற்குரிய தாரணகம குசலதம்ம தேரரின் தாயார் இத்திட்டதிற்கு நிதி உதவி அளித்தார். அதிதிகள் மற்றும் அவர்களது துணைவியர் முன்னிலையில் ஓய்வு இல்லத்தை திறந்து வைக்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் இராணுவப் படையினரின் பங்களிப்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது.