நாட்டின் இதய மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ரூபா 120 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துத் தொகை ஒன்றை கட்டார் நாட்டு அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு நேற்று (15) அன்பளிப்புச் செய்தது.
இந்த மருந்துத் தொகை கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலிபா வினால் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய ரமேஷ் பத்திரன விற்கு மருந்து வழங்கப் பிரிவில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த மருந்துகளை பெற்றுக்கொண்ட சுகாதார மற்றும் கைத்தொழில் அமைத்து வைத்தியர் ரமேஷ் பத்திரன உரையாற்றுகையில்,
கட்டார் நாட்டினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான அன்பளிப்புகள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கட்டார அரசாங்கத்திற்கு இலங்கையின் சுகாதார அமைச்சராக அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவித்தார்.
சுதந்திர சுகாதார சேவை ஒன்றை செயல்படுத்தும் எம்மைப் போன்ற நாடுகளினால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக இவ்வாறான அன்பளிப்புகள் கிடைப்பதன் ஊடாக மக்களுக்கு பரவலான சுகாதார சேவையொன்றை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதன் போது கருத்து தெரிவித்த கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹமூத் அபு கலிபா
இலங்கை மற்றும் கற்றவர் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக சர்வதேச உறவு ஒன்று காணப்படுவதாகவும், எதிர்காலத்திலும் இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான பங்களிப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித்த மஹீபால, பிரதிப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, உட்பட சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் கட்டார் நாட்டு தூதரகத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.