ரூபாய் 2.39 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கொரில்லா 450 மோட்டார் சைக்கிள் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நவீன மாடர்ன் ரோட்ஸ்டராக விளங்குகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள ஷெர்பா 452 என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் முற்றிலும் மாறுபட்ட பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.
ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் மாடலை விட 11 கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ள கொரில்லா 450-யில் 17 அங்குல ட்யூப்லெஸ் டயர் உள்ளது.
120/70-R17 முன்புறத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் 160/60-R17 பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட Analogue வேரியண்டில் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்ற கிளஸ்ட்டர் மற்றும் Dash, Flash என இரண்டிலும் ஹிமாலயனில் உள்ள TFT கிளஸ்ட்டர் என இரு விதமாக பெற உள்ளது.
Royal Enfield Guerrilla 450 Price list
- Analogue Guerrilla ரூ. 2.39 லட்சம்
- Dash Guerrilla ரூ.2.49 லட்சம்
- Flash Guerrilla ரூ. 2.54 லட்சம்
(All price ex-showroom)