எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், இன்று பாரிஸில் நடைபெறும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் கோடைகால வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளது, அதில், இந்தியா உட்பட பல நாடுகளில் விற்பனை செய்யப்படுவதற்காக பல சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒன்பிளஸ் கோடைகால வெளியீட்டு நிகழ்வு
பாரீஸில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் தயாரிப்புகள் தொடர்பாக OnePlus நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. . ஸ்மார்ட்போன், Nord 4, OnePlus Pad 2 டேப்லெட், வாட்ச் 2R மற்றும் Nord Buds Pro 3 என பல்வேறு சாதனங்களை ஒன்பிளஸ் இன்று அறிமுகப்படுத்துகிறது.
இந்த அறிமுக நிகழ்வானது, பாரீசில் நடைபெற்றாலும், இந்திய நேரப்படி இன்று (2024 ஜூலை 16) மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இதைத்தவிர, ஒன்பிளஸ் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் 4, பட்ஜெட்-ஃபோகஸ் செய்யப்பட்ட நோர்ட் சீரிஸில் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியின் மிலனில் நடைபெறும் நிறுவனத்தின் கோடைகால வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதில், பேட் 2, OnePlus Nord Buds 2 Pro மற்றும் OnePlus Watch 2R ஆகிய சாதனங்களும் அறிமுகமாகின்றன.
OnePlus Nord 4 சிறப்பம்சங்கள்
Nord 4 பற்றிய விவரங்கள் அனைத்தையுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒன்பிளஸ் வெளியிடவில்லை என்றாலும், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை தொடர்பாக தகவல்கள் கசிந்துள்ளன.
OnePlus Nord 4 போனில் இந்த அம்சங்கள் இருக்கலாம்!
டிப்ஸ்டர் ஒன்பிளஸ் கிளப் X தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தா,, OnePlus Nord 4 ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் Tianma U8+ OLED டிஸ்ப்ளே இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் 2772×1240 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 2150 nits பிரைட்னஸ் கொண்டதாக புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 இருக்கலாம்.
அதேபோல, Qualcomm Snapdragon 7+ Gen 3 சிப்செட் மற்றும் LPDDR5X ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 50MP Sony LYT 600 முதன்மை சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கல்லாம். முன்பக்கத்தில், செல்பி எடுப்பதற்கும் வீடியோ அழைப்புகளில் கலந்துகொள்வதற்கும் 16எம்பி ஷூட்டர் இருக்கும் என்றும் தெரிகிறது.
Nord 4 இல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், Dolbay Atmosக்கான ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அலர்ட் ஸ்லைடர், 0809 AAC லீனியர் மோட்டார், 17,900 மில்லிமீட்டர் குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் ஒரு IR பிளாஸ்டர் ஆகியவை இருக்கலாம்.
அண்மையில் வெளியிடப்பட்ட OnePlus சாதனம் 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், Nord CE 4 மற்றும் OnePlus 12R இரண்டும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்பதால், புதிய சாதனத்திலும் இதுபோன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14க்கு மேல் ஆக்சிஜன் ஓஎஸ்ஸின் சமீபத்திய பதிப்பில் ஃபோன் இயங்கக்கூடும். Nord 4 புதிய வரவானது 4 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 6 வருட பாதுகாப்பு பேட்ச் புதுப்பிப்புகளுடன் வரும் என்று ஏற்கனவே ஒன்பிளஸ் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
OnePlus Nord 4 இன் விலை என்ன?
Nord 4 இன் அசல் விலை சுமார் ₹31-32,000 ஆக இருக்கலாம், இதன் விலையை ₹30,000-க்குள் கொண்டு வர சில வெளியீட்டு சலுகைகளை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறவிருக்கும் OnePlus கோடைகால வெளியீட்டு நிகழ்வை யூடியூப் சேனலில் நேரலையில் பார்க்கலாம்.