டாடா கர்வ் கூபே எஸ்யூவிக்கு கடும் சவாலினை ஏற்படுத்த காத்திருக்கின்றது சிட்ரோயன் நிறுவனத்தின் பாசால்ட் எஸ்யூவி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகின்றது. சில மாதங்களுக்கு முன்பே படங்கள் ஆனது வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்த மாடல் பாசால்ட் ஆனது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதனால் மிகவும் கடும் சவாலிணை ஏற்படுத்தும் வகையிலான விலையை சிட்ரோயன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, இந்நிறுவனம் வெளியிட்டிருந்த C3 ஏர்கிராஸ் மற்றும் eC3, C3 போன்ற மாடல்கள் வரவேற்பினை குறைந்த விலையில் பெற்றுள்ளன.
மற்ற சிட்ரோயனின் மாடல்களில் உள்ள 110 hp பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம்.
இன்டிரியருடன் வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்ற 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் ADAS போன்ற பாதுகாப்பு வசதிகளும் பெறக்கூடும்.
பாசால்ட் காரை பற்றிய முழுமையான விபரங்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்த ஏற்கனவே டாடா கர்வ் சந்தைக்கு வரவுள்ளது. எனவே இரண்டு மாடல்களும் எலக்ட்ரிக் மற்றும் ICE என இரண்டிலும் விற்பனைக்கு எதிர்காலத்தில் கிடைக்க உள்ளது.