இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மாலைதீவு உயர்ஸ்தானிகரை அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மாலைதீவு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் சிறந்த ஒத்துழைப்பிற்காகவும், ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பிற்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இராஜாங்க அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஜூலை 16) இடம்பெற்றது.
இன்று பிற்பகல் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரிகேடியர் ரொசெட் அவர்களை ஜெனரல் குணரத்ன வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நதீக குலசேகரவும் கலந்து கொண்டார்.
மேலும், பிரிகேடியர் ரொசெட் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலங்கை வந்துள்ளார்.