எக்ஸ்ட்ர் எஸ்யூவி காரில் Hy-CNG duo என்ற பெயரில் இரட்டை சிலிண்டர் முறையை ஹூண்டாய் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் தனது கார்களில் கொண்டு வந்திருந்த நிலையில் அதிகப்படியான பூட்ஸ்பேசினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் வகையில் இந்த நுட்பத்தை செயல்படுத்தி வந்தது.
இதனை பின்பற்றி தற்பொழுது ஹுண்டாய் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது முதல் முறையாக எக்ஸ்டரில் இந்த நுட்பம் வந்துள்ளது.
ஏற்கனவே விற்பனை இருந்தால் ஒற்றை சிலிண்டர் சிஎன்ஜி வேரியன்டை விட இது ரூபாய் 7000 வரை கூடுதலாக அமைந்திருக்கின்றது தற்பொழுது கூடுதலாக வெளியிடப்பட்ட எக்ஸ்டர் நைட் எடிசன் மாடலிலும் சிஎன்ஜி ஆப்ஷன் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வந்துள்ளது.
இந்த மாடல் பிரசித்தி பெற்ற டாடா மோட்டார்சின் பன்ச் எஸ்யூவி காருக்கு எதிராக விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 93 ஆயிரத்துக்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கின்ற சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் நைட் எடிசன் போன்றவை எல்லாம் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
HY-CNG duo S – ₹ 8,50,300
HY-CNG duo SX – 9,23,300
HY-CNG duo EXTER KNIGHT SX -₹ 9,38,200
(ex-showroom)