பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு குவைத். சுமார் 4.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குவைத், உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் ரூ.100-க்கு விற்கப்படும் சாதாரண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரப்பர் செருப்புகள், குவைத்தில் ஒரு லட்ச ரூபாய் விலைப்பட்டியலுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. செருப்புக் கடையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்ட ரப்பர் செருப்புகளின் விலைக்குறிப்பில் 4,590 ரியால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய். இதனை கையுறை அணிந்து எடுத்து காண்பிக்கும் கடையின் ஊழியர், ரப்பர் செருப்பின் வளைவுத் தன்மை, வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்புகள் குறித்து வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார்.
தற்போது சமூகவலைதளங்களில் வைராகும் இந்த செருப்பு குறித்த வீடியோவுக்கு கீழே கலவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த செருப்புகளின் விலை பல இந்தியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவை வழக்கமாக குளியலறையில் அணியும் செருப்புகளைப் போலவே தோன்றுவதாக சுட்டிக்காட்டி வாயடைத்துபோயிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88