மஸ்கட்: ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் இருந்து ஒன்பது பேரை மீட்டுள்ளது இந்திய கடற்படை. தற்போது வரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது. திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் (Duqm) துறைமுகத்துக்கு அருகே ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. இதில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியில் இருந்தனர்.
இதையடுத்து மாயமான பணியாளர்களில் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் இந்த பணியில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் டெக் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானமான பி-8ஐ இணைந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று கவிழ்ந்த கப்பா அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை மேற்கொண்டது. இந்த சூழலில் கவிழ்ந்த கப்பலில் ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் கடந்த 2007-ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. கடல் சீற்றம் மற்றும் பலமான காற்று காரணமாக இந்த கப்பல் கவிழ்ந்ததாக தகவல். இந்த கப்பல் தீவு தேசமான கொமொரோசு நாட்டை சேர்ந்ததாகும்.