கொகுவலை நாற்சந்தியில் காணப்படும் அதிக போக்குவரத்து வாகன நெரிசல் காரணமாக ஹொரணை கொழும்பு பிரதான வீதிக்கு மேலாக கொகுவலை நாற் சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணாவர்தன விழா இன்று (17) சுப நேரத்தில் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான மேற்பார்வையின் கீழ் ஹங்கேறிய நாட்டு பொட்டனட் பிட்டோ நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் அக்சஸ் பொறியியலாளர் நிறுவனம் செயற்பட்டு, இதற்கான பணிகளை மேற்கொண்டது.
2021 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இம் மேம்பாலம் 254 மீட்டர் நீளமும் 9.4 மீட்டர் அகலமும் உடையது. இதற்காக 3599 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.