சிங்கப்பெருமாள் கோவில் தான் அடுத்த தாம்பரம்…

‘சென்னையில் தாம்பரம் வரையுள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டுள்ளன, அதற்கு மேல் ஒன்றும் இல்லை’ என சொல்லி வந்த காலம் மாறி விட்டது. அதைத் தாண்டிய பகுதிகளும், சென்னைக்கு நிகரான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணம் செங்கல்பட்டுக்கும் மறைமலை நகருக்கும் இடையே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் தான். 

IT நிறுவனங்களை மையமாகக் கொண்ட OMR – ECR பகுதிகளிலிருந்து வேறுபட்டு, பல்வேறு குடியிருப்புப் பகுதிகளைக் கொண்ட இடமாக உருமாறி வருகிறது சிங்கப்பெருமாள் கோவில். 

கச்சிதமாகத் திட்டமிட்டு, போக்குவரத்துக் கட்டமைப்புகளைச் செய்துள்ளதால், குடியிருப்புவாசிகளுக்கு ஏற்ற இடமாக இது அமைந்துள்ளது. 

எளிதான இணைப்பு வசதி:

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மின்சார ரயில் சேவை, பேருந்து வசதி, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்புகள் தடையில்லாமல் கிடைக்கின்றன. சென்னையின் முக்கிய மையாக உள்ள இந்தப் பகுதி நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. 

சிறந்த முதலீட்டு முடிவு: 

ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பொருத்த அளவில், ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் இடம் வாங்குவதுதான் தற்போது சிறந்த முடிவாக இருக்கும் எனக் கருதுகிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். ஏனென்றால், கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ள ரயில்வே ஓவர் பாசின் விளைவாக சிங்கப்பெருமாள் கோவிலில் ஜி.எஸ்.டி சாலையின் இடதுபுறத்திற்கு இணையாக தற்போது வலது புறம் உள்ள பகுதிகளும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

இந்த ரயில்வே ஓவர் பாஸ் பாலம் மட்டுமே சிங்கப்பெருமாள் கோவிலின் சிறப்பம்சம்  இல்லை. அதற்கு இணையாக எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை வர இருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடும் சிங்கப்பெருமாள் கோவிலில் இணைகிறது. இதுதவிர, தாம்பரம் செங்கல்பட்டு உயர்நிலை சாலை வழித்தடம் ஒரு முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி சாலையை ஒரகடத்துடன்  இணைக்கும் ஒரே பகுதி சிங்கப்பெருமாள் கோயில் மட்டுமே. 

இவ்வாறு அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட சிங்கப்பெருமாள் கோவிலில் ரயில்வே ஓவர் பாஸ் பிரிட்ஜ் இறங்கும் இடத்தில், சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து ஒரு நிமிடத்தில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் (G SQUARE) பவிலியன்ல் வில்லா மனைகளை வாங்கினால் எதிர்காலத்தில் அதன் மதிப்பு இரட்டிப்பாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் பலரும் இங்கு மனை வாங்க மிகவும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். .

ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் வழிகள்

சென்னையில் ரயில், சாலை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்பை வழங்கும் ஒரே சாலை ஜி.எஸ்.டி தான்.   

பெங்களூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலைக்கான இணைப்பு சிங்கப்பெருமாள் கோவிலில் இருக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரல் முதல் பூந்தமல்லி வரை சுமார் 30 கிமீ தூரத்துக்கு பெரும் வளர்ச்சி அடையும் சூழலும் உருவாகியுள்ளது. 

இங்கு, சென்னை பைபாஸ் உடன் இணைப்பு இருப்பதால் நேரடியாக கொல்கத்தா நெடுஞ்சாலையை அடையலாம். இதனால் சென்ட்ரல் முதல் மாதவரம் வரை சுமார் 20 கி.மீ தூரமுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். 

GST சாலையிலிருந்து வண்டலூர்- கேளம்பாக்கம் வழியாக OMR-ECR பகுதிகளுக்கு ஐடி ஊழியர்கள் செல்ல கச்சிதமான இணைப்பு வசதிகள் உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் சென்றடைய பயணிகளுக்கு சிறப்பு வசதியை அளிக்கிறது. 

சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடுக்கு இணைப்பு உள்ளதால், எண்ணூரில் இருந்து மகாபலிபுரம் வரையிலான வர்த்தகப் பாதையை இணைக்கிறது. இதனால் மக்களுக்கு பயண நேரமும் குறைகிறது. 

850க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்:

சிங்கப்பெருமாள் கோவிலில் மஹிந்திரா, ரெனால்ட்- நிசான், ஃபோர்டு மற்றும் BMW உள்ளிட்ட முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் டயர் தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ZOHO, கேப்ஜெமினி, விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் உள்ளன. 

SRM பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. 

அனைத்து முக்கிய இணைப்புச் சாலைகளும் சிங்கப்பெருமாள் கோவில் வழியாகச் சென்று சுமார் 850 உற்பத்தித் தொழிற்சாலைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம் 

ஜிஎஸ்டி சாலையின் வலதுபுறம் ரயில்வே பாதை இருப்பதால் இடதுபுறப் பகுதி வளர்ச்சி கண்டு வந்தது. புறவழிப் பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. 

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம், இப்போது ஜிஎஸ்டி சாலையின் இருபுறத்திலும் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது. 

சென்னையின் தற்போதைய முக்கிய வளர்ச்சிக்கு சிங்கப்பெருமாள் கோவில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஜிஎஸ்டி சாலையின் இணைப்பு இருப்பதால், பல்வேறு கட்டமைப்பு மற்றும் பல்வேறு வாய்ப்புகளையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. 

இதனால் மக்கள் வசதியாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குடியிருப்புகளும் பெருகுவதால், புதிய தொழில் தொடங்கவும் ஏற்ற இடமாகவும் இது மாறியுள்ளது என்கிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யவும்

 https://gsquarepavillion.com

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.