தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலராக தீரஜ்குமார் நியமனம்

சென்னை: உள்துறை செயலர் பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வி துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு, கூட்டுறவு துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வள துறை செயலராகவும், உணவு பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கல்வி ஆணையர் கே.வீரராகவராவ், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த குமார் ஜயந்த், தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார், உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த பி.அமுதா, வருவாய் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த வி.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, கன்னியாகுமரி ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மீன்வள துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்து துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம், கைத்தறி துறை இயக்குநராகவும், வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கர், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி டி.மோகன், உணவு பொருள் வழங்கல் ஆணையராக வும், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஜவுளி துறை ஆணையராகவும், கடலூர் ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த எம்.கோவிந்தராவ், மின்ஆளுமை முகமை இயக்குநராகவும், உயர்கல்வி துறை முன்னாள் செயலர் ஏ.கார்த்திக், சிட்கோ மேலாண் இயக்குநராகவும், கன்னியாகுமரி ஆட்சியர் பி.என்.தர், அறநிலையத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த கே.வி.முரளிதரன், சமூக பாதுகாப்பு துறை இயக்குநராகவும், பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.