மீண்டும் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை X- Trail எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு இருக்கைகளைக் கொண்டுதான் விற்பனைக்கு உள்ள மாடலானது பல்வேறு சிறப்பம்சங்களுடன் கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், பாதுகாப்பு தொகுப்பினையும் பெறுகின்றது.
எக்ஸ்-ட்ரெயில் காரில் சில்வர், கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் 163PS மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 12v மைல்டு ஹைபிரிட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மூன்று சிலிண்டர் என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
210mm கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 255/45 R20 டயர்களுடன் வருகின்ற இந்திய மாடலின் நீளம் 4,680மிமீ, 1,840மிமீ அகலம், 1,725மிமீ உயரம் மற்றும் 2,705மிமீ நீளமுள்ள வீல்பேசினைக் கொண்டுள்ளது.
எக்ஸ்-டிரெயில் ஏழு ஏர்பேக்குகள், ஆட்டோ வைப்பர், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, டிராக்ஷன் கண்ட்ரோல், லிமிடெட்-ஸ்லிப் டிஃப், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுபாப்பு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா மற்றும் பேடல் ஷிஃப்டர் உள்ளது.
இரண்டாவது வரிசையில் 40/20/40 ஸ்பிளிட் மடிப்பு செயல்பாடு, ஸ்லைடிங் மற்றும் சாய்வு செயல்பாடுகள், மூன்றாவது வரிசையில் 50/50 ஸ்பிளிட் மடிப்பு கிடைக்கும்.
அடுத்த சில வாரங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிசான் எக்ஸ்-ட்ரெயில் விலை ரூபாய் 40 லட்சத்தில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இந்த மாடல் முழுமையாக இந்திய சந்தையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா கோடியாக் , ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுவதுடன் ஜீப் மெர்டியன் எஸ்யூவியை எதிர்கொள்ள உள்ளது.